சிறுவர்மணி

தமிழ்த் தாத்தா!

13th Mar 2021 06:00 AM | எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

ADVERTISEMENT


சாமிநாதன் என்றோர் தாத்தா
செய்த சாதனைகள்தனைக் கேட்பீர்
பழைமை மிக்கப் பலநூல் அன்று 
புலவர் ஓலைச் சுவடியாய்த் தந்தார்!

ஓலைச் சுவடியில் இருந்த நூலின் 
உயர்வை அறியார் இருந்ததாலே 
வீட்டுப் பரண்மேல் வைத்தார் அவற்றை 
வேண்டாப் பொருளை வைத்தல் போலே!

ஆண்டு பலவும் ஓடிப் போனதே
அவற்றைக் கரையான் அரிக்கலானதே
பலப் பல ஊரிலும் பழைய சுவடிகள்
பரண்மேல் இதுபோல் பாழாய் ஆனவே!

அறிந்தார் இதனை நம் சாமிநாதன்
விரைந்தார் சுவடிகள் தேடும் பணியில்!
பகலும் இரவும் பாராமலே அவர்
பல ஊர் சென்றார் சுவடிகள் கேட்டு!

ADVERTISEMENT

பலப்பல சுவடிகள் கரையான் அரித்ததில் 
பொலபொல என்றே போனது கண்டார்!
சேர்த்த சுவடிகள் சீர்பட ஆக்கி
செப்பம் செய்து நூலுருச் செய்தார்!

செந்தமிழ் உயிர்போல் சிறந்து நின்ற 
சங்க இலக்கியம் காத்ததாலே 
சாமிநாதன் பட்டங்கள் பெற்றார்!
"தமிழ்த் தாத்தா' எனப் புகழினைப் பெற்றார்!

ADVERTISEMENT
ADVERTISEMENT