சிறுவர்மணி

விடுகதைகள்

13th Mar 2021 06:00 AM

ADVERTISEMENT

 

1. கறுப்புக் காகம் ஓடிப் போச்சு... வெள்ளைக் காகம் நிக்குது...
2. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும்... தண்ணீர் குடித்தால் சாகும்...
3. மழையோடு வருகிற மஞ்சள் புறாவை, வெட்டினால் ஒரு சொட்டு ரத்தம் வராது...
4.  எண்ணெய் வேண்டா விளக்கு, எடுப்பார் கை விளக்கு...
5. வித்தில்லாமல் விளையும், வெட்டாமல் சாயும்...
6. அம்மா பின்னிய நூலை, அவிழ்த்தால் போச்சு...
7. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன்..
8. பல அடுக்கு மாளிகையில், இனிப்பு விருந்து...
9. உடல் கொண்டு குத்திடுவான், உதிரிகளை ஒன்றாக இணைப்பான்...

விடைகள்

1. உளுந்து  
2.  நெருப்பு    
3. ஈசல்
4. மெழுகுவர்த்தி    
5.  வாழை
6.  இடியாப்பம்  
7.  மணிக்கூண்டு
8.  தேன் கூடு    
9.  ஊசி

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT