சிறுவர்மணி

கடி

13th Mar 2021 06:00 AM

ADVERTISEMENT

 

""என்னடா இது? பாம்பு படம் போட்ட பேப்பர் ஈரமா இருக்கு?''
""அது தண்ணிப் பாம்பு சார்!

அமுதா,அசூர் போஸ்ட்,
திருச்சி - 620015.

 

ADVERTISEMENT

""நீ ஏன் மாறுவேடப் போட்டியிலே கலந்துக்கலே?''
""யார் முன்னாடியும் வேஷம் போடக் கூடாதுன்னு எங்கப்பா சொல்லியிருக்கார்!...அதனாலேதான்!''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம். 

""நந்து கடிகாரத்தைப் பார்த்து, பெரிய முள் எதிலே இருக்கு?... சின்ன முள் எதிலே இருக்கு? சொல்லு பார்க்கலாம்!''
""ரெண்டு முள்ளும் கடிகாரத்துக்குள்ளேதான் இருக்கு தாத்தா!''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.


 

""ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சு!......பின்னிக்க வா!''
""லேட்டாயிடுச்சும்மா! நான் தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டே போறேன்!... லேட்டா வந்தா பின்னிடுவேன்னு டீச்சர் சொன்னாங்கம்மா. அவங்களே பின்னுவாங்கன்னு நெனைக்கிறேன்!''

எஸ்.சத்யா இராவி,
கம்பைநல்லூர்.

 

""அந்த அங்கிள் ஒரு ஈ, கொசுவுக்குக் கூட தீங்கு நினைக்க மாட்டாரு!''
""அதனாலே?''
""கொசு வலைக்குள்ளேதான் தூங்குவாரு!''

எஸ்.பி.விஜயராகவன்,
பெசன்ட் நகர்.

 

""எங்கப்பா கிழிச்ச கோட்டை நான் தாண்ட மாட்டேன்!''
""எதுக்கு கிழிஞ்சு போன கோட்டையெல்லாம் தாண்டணும்?''

எம். அசோக்ராஜா
திருச்சிராப்பள்ளி -620015.
 

Tags : கடி
ADVERTISEMENT
ADVERTISEMENT