சிறுவர்மணி

கருவூலம்: பெங்குவின்

DIN


சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த பறவைகளில் பென்குயின்களும் அடங்கும்! வெள்ளை நிற வயிற்றை தூக்கியபடி துடுப்பு போன்ற இறக்கைகளை அசைத்து, அசைத்து அவை நடந்து செல்வதைப் பார்க்க ரம்மியமாக இருக்கும்! இவற்றை நேரில் பார்க்க வேண்டும் என்றால், அண்டார்டிகாதான் செல்ல வேண்டும்! அங்கு அவை கூட்டம் கூட்டமாக அணிவகுத்து பனியில் நகர்ந்து செல்லும் அழகே தனி!

 பென்குவின்களால் பறக்க இயலாது! இவை பெரும்பாலும் நீரிலும், அவ்வப்போது நிலத்திலும் வாழ்பவை. எம்பரர் பென்குவின், அடிலய், ஜென்டூ, சின்ஸ்ட்ராப், மக்ரோனி, ராக் ஹாப்பர் என இவற்றில் பல வகைகள் உண்டு! 

இவற்றில் சில ஒரு அடி முதல் சுமார் 5 அடி வரை உயரம் கொண்டவை. இவை நீரில் லாவகமாக நீந்தும்! பெங்குவின்கள் கூட்டம் கூட்டமாக வாழும்!

இவைகளுக்குப் பிடித்த உணவு, அண்டார்டிகா கடலில் அபரிமிதமாகக் கிடைக்கும் "கிரில்' வகை மீன்களாகும். பெங்குவின்கள் திமிங்கிலங்களின் உணவாக இருக்கின்றன. 

பெங்குவின்கள் மனிதர்களிடம் மிகவும் சிநேகம் பாராட்டும் குணம் கொண்டவை. தன் ராஜ நடையோடு மனிதர்களுக்கு நடுவிலும் வந்து போய்க்கொண்டிருக்கும்!

தொகுப்பு : கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT