சிறுவர்மணி

நூல் புதிது!

DIN


பானைக்குள் போன யானை

(சிறுவர்களுக்கான நாடகங்கள்!)
ஆசிரியர் - இடைமருதூர் கி.மஞ்சுளா
பக்கம் - 160
விலை - ரூ 125/-

சிறுவர்களுக்கு பாடல்கள், கதைகள் என்று ஏராளமாய் உள்ளன. ஆனால் நாடக நூல்கள் குறைந்த அளவே உள்ளன. மூன்றும் எங்கே?... மறதி மின்னாவும், புத்திசாலி புஜியும்!... பொய்யை மெய்யாக்கும் கருவி!...முதலான 14 நாடகங்களின் தொகுப்பே இந்த நூல்! அனைத்தும் சிறுவர்கள், பல நலச்சங்களிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும், பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா போன்ற முக்கிய நிகழ்ச்சிகளிலும் நடித்துக் காட்டும் வகையில் எழுதப்பட்டவை. இதிலுள்ள கருத்தும், அறிவியலும், வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளன. வெளியிட்டோர் - மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600104.தொலைபேசி - 044 25361039.

வானவில்

(சிறார் பாடல்கள்)
ஆசிரியர் - ந.க.தீப்ஷிகா
பக்கம் - 40
விலை - ரூ 65/-

தீப்ஷிகாவை அனைவரும் வாழ்த்த வேண்டும்! அவரது எழுத்தார்வத்தை ஊக்கப்படுத்த வேண்டும்! 7 - ஆம் வகுப்பு படிக்கும் தீப்ஷிகாதான் இந்த நூலின் பாடலாசிரியர்! 30 பாடல்கள்! அத்தனையும் அழகாகக் கோர்க்கப்பட்ட முத்துக்கள்! சமையற்கட்டில் உள்ள அஞ்சரைப் பெட்டி பற்றிய பாடலாகட்டும்... காற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் பாடலாகட்டும்.... அனைத்திலும் தீப்ஷிகாவின் கூரிய கவனம் தெரிகிறது! புத்தக வடிவமைப்பை, வே. சுபாஷ் செய்திருக்கிறார்! அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்! அவ்வளவு அற்புதம்! வெளியிட்டோர் - சாரல் வெளியீடு, முனியப்பன் வீதி, கீழ அம்பிகாபுரம், திருச்சி - 620004, கைபேசி - 91 7358968695.

பாட்டுப் பூங்கா!


(குழந்தைப் பாடல்கள்)
ஆசிரியர் - எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
பக்கம் - 25
விலை - ரூ 70/-

குட்டிப் பாட்டு, தெப்பக்குளம், நமது நதி முதலிய 25 பாடல்களின் தொகுப்பு! இந்நூலாசிரியருக்கு அறிமுகமே தேவையில்லை! குழந்தைகள் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வத்தோடு பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருபவர்! கதைகள், நாடகங்கள், பாடல்கள், கதைப்பாடல்கள் என பல்வேறு படைப்புகளை ஈந்துள்ளார்! தேசிய விருது, ஏ.வி.எம். அறக்கட்டளை விருது உட்பட 12 க்கும் மேலான விருதுகளைப் பெற்றவர். "குட்டிக் குட்டிப் பாட்டு..... கேட்க லட்டுப் பாட்டு..... தட்டித் தட்டித் தாளம்..... போட்டுக் கேட்க வாங்க!....' என முதல் பாட்டே நம்மை, நூலுக்குள் அழைக்கிறது. இன்னொரு உதாரணம்.... "பட்டுச் சிட்டு' என்ற பாடலில்,... "அடுத்த வீட்டு அண்ணா அதையே பிடிக்க மெல்லப் பதுங்கி வருகிறான்!.....அடுத்த நொடியில் சிட்டு இரண்டும் அம்பாய் எழும்பி எங்கோ மறைந்ததே!..... என்ற வரிகள் மனதில் காட்சிகளை விரிக்கிறது! வெளியிட்டோர் - பாற்கடல் பதிப்பகம், 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன் பேட்டை, சென்னை - 600091, கைபேசி - 9952913872.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு: சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT