சிறுவர்மணி

விடுகதைகள்

6th Mar 2021 06:00 AM

ADVERTISEMENT

 

1. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்லுவான். இவன் யார்?
2. கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான். வெள்ளையானவன் பிறகு விருந்தாவான்...
3. உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான்...
4.  அடித்தாலும் உதைத்தாலும் இவன் அழ மாட்டான்...
5. எவ்வளவு மழையில் நனைந்தாலும் இவனுக்கு நடுக்கமே வராது... இவன் யார்?
6. அனலில் பிறந்தவன், ஆகாயத்தில் பறக்கிறான்...
7. வயிற்றில் விரல் சுமப்பான்... தலையில் கல் சுமப்பான்...
8. ஓடையில் நிற்கும் ஒற்றைக் காலனுக்கு, ஒரே குறிக்கோள் உணவுதான்...
9. ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம்... இது என்ன?

விடைகள்

1. தண்டோரா  
2.  உளுத்தம் பருப்பு
3. காற்று  
4.  பந்து    
5.  குடை 
6.  புகை    
7.  மோதிரம்  
8.  கொக்கு 
9.  ஆலமரம்

ADVERTISEMENT

Tags : விடுகதைகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT