சிறுவர்மணி

கடி

6th Mar 2021 06:00 AM

ADVERTISEMENT

 

""லேப் டாப் எப்படி உடைஞ்சுது?''
""ஆன் லைன் மூலம் கராத்தே கத்துக்கிட்டேன்!''

 

பர்வதவர்த்தினி,
பம்மல்,  சென்னை-600075

ADVERTISEMENT

 

 

""நாலுலே நாலு போனா என்ன?''
""ம்....ம்....''
""சொல்லு,... ஏன் தயங்கறே?''
""சாதாரணமா விடை எழுதினப்புறமா சைபர் மார்க் வாங்குவேன்..... இப்போ விடையே சைபர் வருதேன்னு தயக்கமா இருக்கு சார்!''

ஏ.நாகராஜன்,
பம்மல்.

 

 

""எங்க சார் முதல் பீரியட் பாடம்  நடத்தும்போது நான் கேட்டுக்கிட்டே இருப்பேன்!''
""அவ்வளவு நல்லா நடத்துவாரா?
""நான்தான்  "கேட்'  டுக்கிட்டே இருக்கிறேனே,.... எனக்கு எப்படித் தெரியும்?''

செ.ஆசைத்தம்பி,
சேலம்.

 

""சுண்டைக்காய் சாப்பிடச் சொன்னாலே அம்மாவுக்கும், எனக்கும் சண்டை வரும்!''
""அப்ப "சண்டைக்காய்' னு சொல்லு!''

ஆர்.எம்.அக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்.
""என்னடா கோபு!..... ரொம்ப நாளா உன் போனையே காணோம்?''
""அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே பாபு!....என் போன் எங்கிட்டே பத்திரமா இருக்கே!''

உ . சந்திரமாலா,  
நெய்வேலி - 607308
""கொரோனா தடுப்பூசி எங்கே போடறாங்க?''
""கைலதான்!''

ஆர்.சுந்தர்ராஜன்,
சிதம்பரம்.

Tags : கடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT