சிறுவர்மணி

உலகின் மிகச் சிறந்த சுமை தூக்கி!

ஆ. கோ​லப்​பன்


படத்துலே பார்க்கறீங்களே அந்தப் பூச்சிதான் உலகத்திலேயே அதிகமான எடையைத் தூக்க வல்லது! இந்தப் பூச்சியோட பேரு டயபாலிக் அயர்ன் க்ளாட் பீட்டில்! இந்தப் பூச்சியைப் பற்றிய தகவல் ஆச்சரியமா இருக்கு! இந்தப் பூச்சி துளியூண்டு ஒரு சின்ன வேர்க்கடலை அளவே இருக்கும்! ஓக் மரங்களின் மரப்பட்டைக்கு அடியிலே ஆசையாய் வசிக்குமாம்! ரொம்பச் சின்ன பூச்சி! ஆனா மூர்த்தி சிறிதா இருந்தாலும் கீர்த்தி பெரிதுன்னு சொல்லுவாங்க இல்லே! அது மாதிரிதான்!
சொல்லப்போனா ஒரு கார் இந்தப் பூச்சி மேலே ஏறினாலும் இதற்கு ஒண்ணும் ஆகாதாம்! கார் போனப்புறமா ஒண்ணுமே நடக்காதது போல ஜாலியா நடை போடுமாம்!
இந்தப் பூச்சிக்கு தன்னோட எடையைப் போல சுமார் 39,000 மடங்கு எடையைத் தாங்கும் சக்தி இருக்கிறதாம்! இந்த அளவுக்கு இந்தப் பூச்சிக்கு எப்படி பலம் இருக்கு? அந்த ரகசியம் டையபாலிக் பூச்சியின் ஓட்டு அமைப்பில் இருக்கிறது. இதை விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க.
சாதாரணமா வண்டுகளின் மேல் ஓட்டில் க்ளூகோஸ், புரதம் போன்ற உயிரிப் பொருள்களின் கலவையான கைட்டின் (C​H​I​T​IN) என்ற பொருள் இருக்கும். டயபாலிக் பூச்சிக்கும் அதே கலவைதான்! ஆனால் ஒரு வித்தியாசம்! புரதத்தின் அளவு சுமார் பத்து சதவிகிதம் கூடுதலாக இருக்கிறது. அதனாலே ஓடு ஓர் இரும்புக் கவசம் போலரொம்ப உறுதியா இருக்கு! பூச்சியின் இரண்டு பாகங்களின் பிணைப்பாக புற ஓடு இருக்கு! இந்தப் பிணைப்பு அழுத்தம் ஏற்படும்போது சற்று இளகி, அதேசமயம் உறுதிபடவும் வண்டைப் பாதுகாக்கிறது!
மேலும் உறுதியான பொருள்களைத் தயாரிக்க இந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு ரொம்ப உதவியா இருந்ததாம்! டயபாலிக் அயர்ன் க்ளாட் பூச்சியை உலகத்திலே யாராலும் தேய்த்து அழிக்க முடியாது!
ஆனா பார்க்கக் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT