சிறுவர்மணி

எழிற்கொடைகள்!

31st Jul 2021 04:37 PM | புலவர் முத்துமுருகன்

ADVERTISEMENT


கண்கவரும் தோற்றங்களில் 
சிரிப்போம் - மணங்
கமழ்ந்திடவே அழகாய் இதழ் விரிப்போம்!

வண்ணம் பல கொண்ட  நாங்கள் 
பூக்கள்! - புலவர்
வடித்திடுவார் எம்மைப் போற்றிப் பாக்கள்!

காலை இளம் பொழுதுகளில் 
மலர்வோம்! - அந்திக்
கருக்கலிலும் எம்மில் சிலர் அலர்வோம்!

சோலையோடு தோட்டங்களில் 
பூப்போம்! - உள்ளம் 
சொக்கும் வண்ணம் காற்றில் மணம் சேர்ப்போம்!

ADVERTISEMENT

இயற்கை தந்த எழிற்கொடைகள்
நாங்கள் - எமக்கு 
இணையழகு கண்ட துண்டோ நீங்கள்

பயன் மிகுந்த வாழ்வு 
எமதாகும்! - எம்மைப் 
பாராட்டும் கடமை  உமதாகும்!

Tags : Siruvarmani Gifts!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT