சிறுவர்மணி

ஒட்டகப் பால்!

31st Jul 2021 04:30 PM | முக்கிமலை நஞ்சன்

ADVERTISEMENT

 

இந்திய ஒட்டகம் ஒரு நாளைக்கு சுமார் 20 லிட்டம் பால் கறக்கும்! ஒட்டகப் பால் ஒரு சத்தான உணவு! மிகவும் ருசியுள்ளது. குறைந்த அளவு கொழுப்புச் சத்து உள்ளது. எளிதில் ஜீரணிக்க வல்லது. வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை ஒட்டகப் பாலில் உள்ளது. வயிறு, குடல் போன்றவற்றின் கோளாறுகளை சீர் செய்யும் வல்லமை படைத்தது! 
ஒட்டகப் பாலைக் காய்ச்சி காபி போட்டுக் குடிக்கலாமான்னு கேக்கறீங்களா? மூச்!....  ஒட்டகப் பாலைக் காய்ச்சவே கூடாது! அந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்! பால் திரிந்துவிடும்! ஒட்டகப் பாலில் தயிர் தயாரிக்க முடியாது. ஆனால் பச்சைக் பாலைக் கடைந்து வெண்ணை எடுக்கிறார்கள்! அந்த வெண்ணையைக் காய்ச்சி நெய்யும் தயாரிக்கிறார்கள். ஆனால் அந்த நெய்யில் கொழுப்புச் சத்து மாட்டுப்பாலிலிருந்து கிடைக்கும் நெய்யில் நாற்பதில் ஒரு பங்குதான் இருக்கும்! 
குழந்தைகளுக்கும் எளிதில் ஜீரணமாகும். இன்னொரு விஷயம்! நின்னுக்கிட்டே பால் கறக்கலாம்!
ஆனால் இன்னும் பலர் ஒட்டகப்பாலைக் குடிக்கத் தயங்குறாங்க. பாலைக் காய்ச்சாமல் குடித்தால் ஏதாவது உடம்புக்கு வந்துடுமோங்கிற பயம்தான் அதுக்குக்  காரணம். 

Tags : siruvarmani Camel milk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT