சிறுவர்மணி

கடி

31st Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

 

""எதுக்கு போஸ்டர்லே கீழே ஒரு வால் இருக்குது?''
""இதுதான் வால் போஸ்டர்!''

மு . மதிவாணன்,
அரூர் - 636903.

 

ADVERTISEMENT

 

""எதுக்குடா கண்ணாடியைக் கொண்டுவந்து காமிக்கிறே?''
""உன் உடம்பை பத்திரமா பாத்துக்கோன்னு அந்த அங்கிள் உங்கிட்டே சொன்னாரே தாத்தா!''

மு . சுகாரா,
தொண்டி.

 

""அந்தப் பாம்பு ரெண்டு தடவை சட்டை உரிக்குதே ஏன்?''
""அதுவா?....ரெண்டாவதா உரிக்கிறது பனியனோ என்னவோ!''


செங்காந்தள்,
 சென்னை - 6000125.

 


""நீங்க ரெண்டு பேரும் எந்த ஸ்கூல்லே படிக்கிறீங்க?
""நான் சாம்சங், இவன் ரெட்மி!''

பி . பரத்,
சிதம்பரம் - 608002.""இப்போ மணி என்ன?''
""இப்பவும் மணி எனக்கு சித்தப்பாதான்!''

எஸ் . பி . விஜயராகவன்,
பெசன்ட்நகர்.
""எருமைமாட்டின் உபயோகங்கள் என்ன?''
""பால் தருகிறது. மேலும் பெற்றோர்கள் நம்மைத் திட்டுவதற்கும் பயன்படுகிறது!''

ஆர் . சாயிராம்,
கந்தகுமாரன் - 608305.

Tags : Siruvarmani Bite
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT