சிறுவர்மணி

கடி

24th Jul 2021 08:22 PM

ADVERTISEMENT

 

""எது நடந்தாலும் அவரு சந்தோசமா இருப்பாரா எப்படி...?''
""ஏன்னா அவருடைய பெயர் சந்தோஷம்...''

ந. பிரபுராஜா, மதுரை.

 

ADVERTISEMENT

 

""எங்கப்பாவோட வாழ்க்கையிலே ஏற்றம், இறக்கம் அதிகமா இருக்கும்!''
""எப்படி சொல்றே?''
""அவரு லிஃப்ட் ஆபரேட்டரா இருக்காரு!''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

 

 

""நேத்து கனவுலே முதல் பால்லேயே அவுட் ஆயிட்டேண்டா!''
""அப்புறம்?....''
""திருப்பி அதே மாதிரி மெள்ளமா அவுட் ஆகறாமாதிரி கனவு!....''
""ஓ!... ஆக்ஷன் ரிப்ளேயெல்லாம் வருதா?''

எஸ் . அருள்மொழி சசிகுமார், 
கம்பைநல்லூர்.

 

 

""உங்க தாத்தா அந்த காலத்திலே ரொம்ப கெளரவம் பார்ப்பாரு!''
""அப்படியா?.... நான் விசுவாசம் நிறைய வாட்டி பார்த்தேன்!''

எஸ். மோகன்,
கோவில்பட்டி - 628501.

 

 

""மன்னார் வளைகுடா தமிழ் நாட்டிலே எங்கே இருக்கு சொல்லு பார்ப்போம்!''
""கடலோரத்தில்தான் சார்!''

 

நெ . இராமன்.
சென்னை - 600074

 

""அரபு நாட்டிலேயிருந்து போட்டோ வந்திருக்கு!''
""எங்கே காண்பி!''
""ரொம்ப "ஷேக்' ஆயிருக்கு!''

உமர், 
கடையநல்லூர் - 627751.

Tags : Siruvarmani Bite சந்தோஷம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT