சிறுவர்மணி

சாலையில் மீண்டும் சைக்கிள்!

24th Jul 2021 09:00 PM | குரு . சீனிவாசன்

ADVERTISEMENT

 

சாலை தோறும் மீண்டும் சைக்கிள் 
வலம் வர வேண்டும் - நேரும் 
சங்க டங்கள் நீங்கி மக்கள் 
நலம் பெற வேண்டும்!

மூலையோரம் முடங்கிக் கிடக்கும் 
மூத்த வாகனம்! - அதை 
முதன்மை இடத்தில் மீண்டும் நாம்
சேர்த்தே ஆகணும்!

மிதித்தால் இயங்கும் பயிற்சியாலே 
மேனி வலிமை சேர்க்கும்!
மெதுவான பயணம் நம்மை 
விபத்தினின்றும் காக்கும்!

ADVERTISEMENT

காற்றில் புகையும், கரியும் இன்றி 
சுற்றுச் சூழல் காக்கும்!
சேற்றை வாரி வீசிச் செல்லும் 
சேட்டைகளும் நீங்கும்!

அண்மைப் பயணம் அத்தனைக்கும் 
அமைந்த வண்டி சைக்கிள்! 
பெண்கள், ஆண்கள் அனைவருக்கும் 
பொருந்தும் நல்ல வண்டி!

 

Tags : Siruvarmani Bicycle back on the road!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT