சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

17th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT


கேள்வி: குளிர்காலத்தில் நாமே வெடுவெடுவென்று நடுங்குகின்றோமே, மென்மையான உடலைக் கொண்ட இந்தப் பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன?

பதில்: கடுங்குளிரிலிருந்து தப்பிக்க பறவைகள் பலவகையான டெக்னிக்குகளை வைத்திருக்கின்றன. இயற்கையும் அவற்றுக்குப் பல வகையில் உதவி செய்கின்றது. குளிர் காலம் வருவதற்கு முன்பே பறவைகளுக்கு நிறைய புதிய சிறகுகள் முளைக்கும். இந்த அதிகப்படியான சிறகுகள் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியை அவற்றுக்கு அளிக்கும்.

மேலும், இந்தச் சிறகுகளுக்கு இடையில் காற்றுப் பைகள் போல உண்டாக்கிக் கொள்கின்றன பறவைகள். இந்த காற்றுப்பைகள் இளஞ்சூட்டைத் தருவதால் குளிர் பாதிக்காது. 

மேலும் குளிர்காலத்துக்கு முன்பு, கொழுப்புச் சத்து நிறைந்த உணவை அதிகமாக பறவைகள் எடுத்துக் கொள்கின்றன. இந்தக் கொழுப்பும் குளிர்காலத்தில் அவற்றுக்கு வெப்பத்தைத் தந்து பாதுகாக்கிறது.

ADVERTISEMENT

மேலும் பறவைகள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து அமர்ந்து கொள்ளும். இதனால் ஒட்டுமொத்தமாக வெப்பம் உண்டாகி அதுவும் ஒரு கேடயமாகப் பயன்படுகின்றது.

இறுதியாக என்னதான் இருந்தாலும் குளிர்காலத்திலும் சூரியன் அவ்வப்போது வெளியே வருவார் இல்லையா? அப்போது பறவைகள் "சன்பாத்' (சூரியக் குளியல்) எடுத்துக் கொள்ளும்.

Tags : Siruvarmani Uncle Antenna
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT