சிறுவர்மணி

பொன்மொழிகள்

17th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

 

நல்ல எண்ணங்கள் இனிமையான மொழிகளாகின்றன. 
- கதே

அமைதியும், சாந்தமும் கொண்ட மனிதனுக்கு எல்லா இடமும் அரண்
மனையே. 
- லில்லி

மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்பது எல்லா சமயங்களின் மையக் கருத்து. 
- விவேகானந்தர்

ADVERTISEMENT

நம்பிக்கையோடு நகர்ந்துகொண்டே இரு. ஓர் இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக! 
- அப்துல் கலாம்

பகுத்தறிவற்றவை கடவுளை நினைப்பதில்லை. பகுத்தறிவு உள்ள நீ ஒரு நிமிடமாவது பிரார்த்தனை செய். 
- கிருபானந்தவாரியார்

கேட்பது நமது நிலை. கொடுப்பது இறையவர் அருள். மனிதன் எதையும் சாதிக்கலாம். ஆனால் அமைதியையும், அருளையும் தருவது இறையவரே. 
- ஜெயேந்திரர்

தன் குறைகளைக் கண்டு அதைத் திருத்திக்கொண்டிருப்பவனுக்கு மற்றவர்களின் குறைகளைப் பார்க்க நேரமிருக்காது. 
- யாரோ

முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை. அவை உருவாக்கப்படுகின்றன. 
- அலிஸன் ஸ்வெட்மார்ட்டன்

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். 
- கோல்ட்ஸ்மித்

நாம் கடவுளிடம் எதை வேண்டிக் கொண்டாலும், நாமும் அதற்காக உழைக்க வேண்டும். 
- ஜெரிமி டெய்லர்

Tags : Siruvarmani Sayings
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT