சிறுவர்மணி

பிளாஸ்டிக் தலைவலி!

17th Jul 2021 07:00 AM | - சுமன்

ADVERTISEMENT


நம் வாழும் உலகின் தலைப்பகுதியில்தான் ஆர்க்டிக் கடல் உள்ளது. அந்தக் கடல் பகுதியில் அதிகமான மக்கள்தொகை இல்லை! ஆனால் ஒரு விசித்திரமான விஷயத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது சிறிதும் பெரிதுமாக சுமார் 300 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள்!

இந்தக் குப்பைகள் எப்படி ஆர்க்டிக் கடலுக்கு வருகின்றன என்பது பற்றி ஆராந்தபோது ஒரு உண்மை தெரிய வந்தது. உலகின் அனைத்துக் கடல்பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் விழுகின்றன. கடலுக்குள் மின்காந்த சக்தியினால் ஒரு இழுவைப் பாதை ஏற்படுகிறது. அந்தப் பாதையில் புகும் பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் ஆர்க்டிக் பகுதியை அடைகின்றனவாம்.

அது சரி, அந்த மின்காந்த இழுவைப் பாதை எதனால் ஏற்படுகிறது என்று ஆராந்தனர். சூரிய வெப்பம், கடலின் மேல் வீசும் காற்று, பூமியின் சுழற்சி ஆகியவற்றால் இந்த மின்காந்த இழுவைப் பாதை அமைகிறதாம்! பிளாஸ்டிக் குப்பைகள் பல ஆண்டுகள் பயணம் செய்து ஆர்க்டிக்கை அடைகின்றன. பூமியின் தலைப்பகுதிக்கு இப்போது மிகவும் தலைவலி!

Tags : Siruvarmani Plastic headache!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT