சிறுவர்மணி

விடுகதைகள்

17th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

 

1. காலும் கிடையாது கையும் கிடையாது... கண்கள் உண்டு அழகிய வாலும் உண்டு... சிறகுகளும் உண்டு... இவன் யார்?
2. இங்கு குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கும், குளிப்பதற்குக் கிடைக்காது...
3. இவனுக்குக் கால்கள் இருந்தாலும் யாரும் இவனைத் தூக்கித்தான் வைப்பார்கள்... நடக்க மாட்டாதவன்...
4.  வீட்டுக்குள் இருக்கும்போது மூடிக்கிடப்பவன், வெளியே போனால் திறந்து கொள்கிறான்...
5. தொப்பி உள்ளவன் வேலை செய்ய வேண்டுமென்றால் தொப்பியைக் கழற்றி விட வேண்டும்...
6. ஒற்றைக்கால் வெள்ளையன், ஓடையிலே தவம் கிடக்கிறான்...
7. உடைத்தவுடன் கண்ணீர் விடுவான். இவன் யார்?
8. பஞ்சை உண்டு படுத்துக் கிடப்பவன், தூங்கும் 
வேளையில் துணைக்கு வருவான்...

 

விடைகள்

ADVERTISEMENT


1. மீன்  
2. தேங்காய் தண்ணீர்
3. நாற்காலி  
4. குடை
5.  பேனா (மூடி)  
6.  கொக்கு
7.  தேங்காய்  
8.  தலையணை

Tags : siruvarmani Narratives
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT