சிறுவர்மணி

கிராண்ட் மாஸ்டர்!

17th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

 

2003ஆம் வருடம் ரஷ்யாவின் சிறுவனுக்கு உலகின் சிறந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம்! சிறுவனின் பெயர் சர்ஜி கர்ஜாகின். 1990 ஆண்டு பிறந்த இந்த செஸ் மேதை தனது 12 ஆவது வயது முடிந்து 7 ஆம் மாதம் இந்த கிராண்ட் மாஸ்டர் விருதைப் பெற்றார். தற்போது கர்ஜாகினுக்கு 30 வயது ஆகிறது.

உலகில் அந்த வயதில் யாருமே கிராண்ட் மாஸ்டர் விருதைப் பெற்றதில்லை. அந்த வயதிற்குக் கீழ் இந்த ஆண்டு வரை அந்த விருதை யாரும் வென்றதே இல்லை. சுமார் 17 வருடங்கள் முறியடிக்கப்படாத சாதனையாக அது இருந்தது!

2021 ஜூன் மாதம் ஹங்கேரியில் ஒரு செஸ் போட்டி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அபிமன்யு மிஸ்ரா என்னும் சிறுவன் அந்த உலக சாதனையை முறியடித்திருக்கிறார். உலகின் மிக இளமையான கிராண்ட்மாஸ்டர் தற்போது அபிமன்யுதான்! அபிமன்யு அந்த சாதனையை எட்டியபோது அவருக்கு 12 வயது 4 மாதங்கள் 25 நாட்களே ஆகியிருந்தது.

ADVERTISEMENT

அபிமன்யுவின் பிறப்பிடம் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி! அபிமன்யு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்!

அபிமன்யுவின் தந்தை மிஸ்ரா, அபிமன்யுவிற்கு இரண்டரை வயதிலேயே சதுரங்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தனது 5 - ஆவது வயதில் தன்னைவிட மூத்த விளையாட்டுக்காரர்களை அவன் ஜெயிக்க ஆரம்பித்துவிட்டான். 7 - ஆவது வயதில் மிகவும் ஆர்வமாகப் போட்டிகளில் கலந்துகொண்டான். நாட்டின் முதன்மையான இளைய செஸ் வீரன் என்ற பட்டத்தைப் பெற்றான். 9 - ஆவது வயதில் உலகின் இளமையான மாஸ்டர் என அழைக்கப்பட்டான். தற்போது உலகின் கிராண்ட் மாஸ்டர் ஆகிவிட்டான் அபிமன்யு! வாழ்க ! மேலும் வளர்க!

Tags : Siruvarmani Grand Master
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT