1. தெனாலிராமன்
ஆசிரியர் - சோதி
பக்கம் - 40
விலை - ரூ 60
தெனாலி ராமனுக்கு விகடகவி வரத்தைக் காளி வழங்கும் "காளியிடம் விகடம்' கதை எத்தனை தரம் படித்தாலும் சலிக்காது. மேலும், வித்தைக்காரனிடம் வேடிக்கை...
நிழலைச் சாப்பிடு... குட்டி போட்ட பாத்திரங்கள்... ஏற்றம் இறைத்த திருடர்கள்... தில்லி வரை புகழ்... உட்பட ஆறு சிறுகதைகள் அடங்கிய புத்தகம். படங்களோடு படுஜோராய் இருக்கிறது! குழந்தைகளுக்குப் படக்கதை என்றாலே மிகவும் பிடிக்கும்!... கீழே வைக்க மாட்டார்கள்!
2. அக்பர் பீர்பால்
வண்ணப் படக் கதை
ஆசிரியர் - சோதி
பக்கம் - 40
விலை - ரூ 60 -
மிகமிக அருமையான புத்தகம்! தெனாலி ராமன் புத்தகத்தைப் போலவே அருமையான படங்களுடன் உள்ளது. பரிசாகக் கசையடி... மூடன் பண்டிதனான...அதிக உணவு! எடை குறைவு!!... அடம் பிடித்த குழந்தை,... விளக்கு வெப்பம் தருமா?... பானை நிறைய வேடிக்கை... முதலிய ஆறு கதைகள்!
அத்தனையும் அறிவூட்டும், நல்முத்துக் கதைகள்! பீர்பாலின் மதியூகத்தை யார்தான் பாராட்டாமல் இருக்க முடியும்? குழந்தைகள் ஆர்வமாகப் படிக்கும் வண்ணம் வண்ணப்படங்களுடன் இருக்கிறது! இரண்டு நூல்களையும் வெளியிட்டோர் : நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605003. போன் - 9345450749.