பொருட்பால் - அதிகாரம் 60 - பாடல் 7
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.
- திருக்குறள்
யானைமீது அம்புகள்
எத்தனை பட்டாலும் ஏற்றுக்கொள்ளும்
உடம்பை மறைக்கும் அளவிலே
அம்புகள் தைத்தாலும் தாங்கிக்கொள்ளும்
உடம்பு புண்பட்டுப் போனாலும்
ஊன்றிப் புகழ் நிலைநிறுத்தும்
செய்தது சிதைந்து போனாலும்
தளராத நெஞ்சுரம் தேவையே.
ADVERTISEMENT
-ஆசி.கண்ணம்பிரத்தினம்