சிறுவர்மணி

கடி

30th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT


 ""ஏண்டா விரல் நகத்தை வெட்டலே?''
""விரல் நகத்தை எப்படி சார் வெட்டும்?''

ஆர்.சுப்பு, திருத்தங்கல், 
திருத்தங்கல் - 626130.

 

""அந்த டிக்ஷனரியை எடுத்துக்கிட்டு வா!..... தலைக்கு வெச்சுக்கிட்டுத்  
தூங்கணும்!''
""எதுக்கு?... அதான் தலகாணி இருக்கே!''
""அர்த்தமில்லாத கனவெல்லாம் வருது!..... அதனாலதான்!''

ADVERTISEMENT

டி.மோகன்தாஸ்,
நாகர்கோவில்.

 

""பேங்குக்கு நடந்து போனா லோன் தருவாங்களா?'''
""யார் சொன்னது?''
""பின்னே பாங்குலே கால்நடைக்கு லோன் தருவாங்கன்னு சொல்றாங்களே!''

தீ.அசோகன்,
திருவொற்றியூர்.

 

""தடுப்பூசி போட்ட இடத்திலே தடிச்சு இருக்கு''
""அப்போ அது தடிப்பூசின்னு சொல்லு!''

பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.


 ""அக்கா!..... சுடுதண்ணி எடுத்துக்கிட்டு வா!''
""இரு!.... ஆன்லைன்லே ஆர்டர் பண்றேன்!''

ஆர்.ருக்குமணி, 
சிதம்பரம் - 608001.

 

""நான் தனி ஆள் இல்லேடா!..... எனக்குப் பின்னாலே ஒரு கூட்டமே இருக்கு!''
""சரி, சரி,..... இப்போ எங்கே இருக்கே?
""ரேஷன் கடையில் க்யூலே நின்னுக்கிட்டிருக்கேன்!''

இ.எஸ்.கீதா,
சிதம்பரம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT