சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

23rd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 


கேள்வி: துருவப் பகுதியில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே காணப்படுவது ஏன்?

பதில்: அவை எப்போதும் வெள்ளை நிறத்திலேயே இருப்பதில்லை. இது எப்படியென்று பார்க்கலாம்.

விலங்குகளின் அரசாங்கத்தில் அனைத்து மிருகங்களுக்கும் உருமறைத்தல் (இஹம்ர்ன்ச்ப்ஹஞ்ங்) என்பது எப்போதுமே அவற்றின் வாழ்வாதார ஏற்பாடுகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது. 

ADVERTISEMENT

வடதுருவம் பெரிய நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கிறது. கோடை மாதங்களில் வடதுருவம் 90% ஈரம் உறைந்திருப்பதில்லை. ஆனால் ஆண்டு முழுவதும் தென்துருவத்தில் பனி உறைந்தே காணப்படுகிறது. எனவே இதன் காரணமாகப் பருவகாலத்தையொட்டி உருமாற்றத் தேவை வடதுருவத்திலுள்ள விலங்குகளுக்கு மட்டுமே தேவைப்படுகிறது.

தென்துருவத்தில் மட்டுமே காணப்படுகின்ற பெங்குவின்கள் ஆண்டு முழுவதும் கருப்பு/வெள்ளையாகத் தான் காணப்படுகின்றன. அங்கே வேறெந்த நிலம்வாழ் மிருகமும் கிடையாதென்பதனால் அவற்றுக்கு எதிரிகள் கிடையாது.

வடதுருவம் அப்படியல்ல. கோடையில் மண்ணிறமான சூழலிலும் குளிர்காலத்தில் வெண்பனிச் சூழலிலும் வசந்தத்தில் பனி உருகும்போது அழுக்குநிறமான சூழலிலும் உள்ளது. அதனால் விலங்குகளின் உருமறைத்தல் (இஹம்ர்ன்ச்ப்ஹஞ்ங்) அதற்கேற்றாற்போல இருக்கிறது.

ஆகவே, பனிக்காலத்தில் விலங்குகள் வெண்மை நிறத்திலும் கோடைகாலத்தில் நிறமாற்றமும் நிகழும்.

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT