சிறுவர்மணி

விவேகானந்தரின் பொன்மொழிகள்

23rd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 


நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே! எனவே எதையும் சாதிக்கும் வல்லமை நமக்கு உண்டு!

பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் வாழ்வில் முன்னேற முடியாது.

நல்ல வழியில் பணம் சம்பாதிப்பதும், அதை சமுதாயத்திற்கு செலவிடுவதும் சிறந்த வழிபாடாகும்.

ADVERTISEMENT

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் இவைகளே நமக்குத் தேவை.

சோம்பேறித்தனத்தை எவ்வழியிலாவது துரத்திட முயற்சி செய்யுங்கள்.

உலகைùள அழகு பொருந்தியதாகவும், அவலக்ஷணமாக ஆக்குவதும், நமது எண்ணங்களே.

மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும், நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.

மகத்தான பணிகளைச் செய்வதற்காக, கடவுள் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவற்றை நாம் செய்து முடிப்போம் என்று உறுதியாக நம்பி செயலாற்றுங்கள்!

துணிவு, வீரம், ஆற்றல் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பணிவே மனிதனின் முன்னேற்றத்திற்குத் தேவையான குணமாகும்.

தொகுப்பு  : ஆர். ருக்குமணி சிதம்பரம்

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT