சிறுவர்மணி

விடுகதைகள்

23rd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

1.  ஒற்றைக் கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள். இது என்ன?
2. ஒட்டியவன் ஒருவன், பிரித்தவன் இன்னொருவன்...
3. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. இது என்ன?
4.  பொட்டுப் போல இலை இருக்கும், பொரி போல பூப் பூக்கும், தின்னக் காய் காய்க்கும், தின்னாப் பழம் பழக்கும். இது என்ன?
5. காற்று நுழைந்ததும், கானம் பாடுவான். இவன் யார்?
6. ஓட்டம் நின்றால் போதும், ஆட்டம் நின்று போகும்...
7. தனித்து இதை உண்ண முடியாது. இது சேராவிட்டாலும் உண்ண முடியாது...
8. வெட்டிக் கொள்வான், ஆனாலும் ஒட்டிக் கொள்வான். இவன் யார்?
9. ஏற்றி வைத்து அணைத்தால், எரியும் வரை மணக்கும்...

விடைகள்

1. முட்டை  
2.  கடிதம்
3. கல்வி
4.  முருங்கை மரம்
5.  புல்லாங்குழல்  
6.  இரத்தம்  
7.  உப்பு
8.  கத்திரிக்கோல்  
9. ஊதுவத்தி

ADVERTISEMENT

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT