சிறுவர்மணி

கடி

23rd Jan 2021 12:00 AM

ADVERTISEMENT

 

""..."ஐக்யூ' ன்னா என்னதுடா?
""..."ஐ'... ங்கிற எழுத்தை வரிசையா 
எழுதறதுன்னு நெனைக்கிறேன்!''

எ.கே.சாகம்பரி கண்ணன்,
அந்தியூர்.

 

ADVERTISEMENT

""அக்கா துப்பட்டா!....''
""துப்பேன்....இதுக்கெல்லாமா கேப்பாங்க?''
""அதில்லேக்கா !.... இந்தா உன்னோட துப்பட்டா!''

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம்,
திருநெல்வேலி.

 

""சரி,.... கவனிங்க,.... "நேற்று  ...இறந்த காலம்!''
""யார் இறந்த காலம் சார்?''

மு.பெரியசாமி,
திருப்புறைப்பூண்டி - 614715


""அறிவு இருக்கா மாமா?''
""டேய்,.... மரியாதையா பேசு!...''
""உங்க பையன் அறிவழகன் 
இருக்கானான்னு கேட்டேன் மாமா!''

கே.ஆர்.ஜெயக்கண்ணன், 
தேரிவிளை.


""கண்ணு மங்கலாத் தெரியுதுடா கண்ணு!''
""டாக்டரைப் பார்க்க வேண்டியதுதானே பாட்டி!''
""பார்த்தேனே,.... அவரும் மங்கலாத்தான் தெரியிறாரு!''

கே.முத்தூஸ்,
தொண்டி - 623409.


""ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு விபத்து!''
""அடப் பாவமே!.... என்ன ஆச்சு?''
""நல்ல காலம்!.... பெருங்காயத்தோட உயிர் தப்பிச்சேன்! இப்போ எல்லாம் சரியாப்போச்சு! 
""ஓ.கே. அதெல்லாம் சரி,.... அப்புறம் அந்த பெருங்காயத்தை என்ன பண்ணே?''

நா. வினோத் குமார், 
அரக்கோணம் 632 510

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT