சிறுவர்மணி

வருத்தத்திற்கான காரணம்!

16th Jan 2021 06:00 AM | முக்கிமலை நஞ்சன்.

ADVERTISEMENT


ஒருமுறை ஒரு விவசாயி தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டார்.  அவரது போதாத காலம்!.... அந்த வருடம் விளைச்சல் நன்றாக இருந்தபோதும் பழங்களில் பூச்சி விழுந்து பெரும்பகுதி தக்காளிப் பழங்கள் அழுகி நாசமாகிவிட்டன.

விவசாயி நொந்து போனார். அதே ஊரில் இருந்த துறவியிடம் போய் தனது வருத்தத்தைச் சொன்னார். 

அந்தத் துறவி விவசாயியிடம், ""கவலைப்படாதே!.... அடுத்த ஆண்டு பலன் நன்றாக இருக்கும்.... ''என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

விவசாயி அடுத்த ஆண்டு தக்காளி பயிரிட்டார். விளைச்சலும் அமோகமாக இருந்தது. பழங்களும் நன்றாக இருந்தன. பழங்களை நல்ல விலைக்கு விற்றார். ஆனாலும் அவருக்கு வருத்தமாக இருந்தது. துறவியைப் போய்ப் பார்த்தார். 

ADVERTISEMENT

அவரது வருத்தத்தை அறிந்துகொண்ட துறவி, ""இப்போது உனக்கு என்னப்பா வருத்தம்......? அதான் விளைச்சல் நன்றாக இருந்ததே!'' என்றார்.

 அதற்கு அந்த விவசாயி, ""ஐயா, கடந்த ஆண்டு நிறைய அழுகல் தக்காளிப் பழங்கள் இருந்தன. அவற்றை என் கால்நடைகளுக்கு வயிறாரப் போட்டு வந்தேன். இப்போது அவைகளுக்குப் போட என்னிடம் ஒரு அழுகின பழங்கள்கூட இல்லை! .... அதனால்தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது! ''

""உன் வருத்தத்திற்கு முடிவே இல்லை!.... '' என்று கூறிவிட்டு நடந்தார் துறவி.

நீதி : எது நடந்தாலும் அதில் குறை மட்டும் பார்க்கிறவர்கள் சந்தோஷத்தை அடையவே முடியாது.

("நித்தம் ஒரு நீதிக்கதை' நூலிலிருந்து ) 

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT