புத்தாண்டு பிறக்கட்டும்!
புதிய ஒளி பரவட்டும்!
தொற்றுநோய்கள் அழியட்டும்!
தொல்லைகள் யாவும் ஒழியட்டும்!
வளமை பொங்கி சிறக்கட்டும்!
வறுமை நாட்டில் தொலையட்டும்!
உழைக்கும் வர்க்கம் தழைக்கட்டும்!
ஊக்கம் மனதில் பெருகட்டும்!
கல்விச்சாலை திறக்கட்டும்!
கலையின் மேன்மை சிறக்கட்டும்!
பல்கித் தொழில் பல பெருகட்டும்!
பாரில் அனைவரும் மகிழட்டும்!
ADVERTISEMENT
அன்பை அனைவரும் போற்றட்டும்
அறத்தின் வழியே நடக்கட்டும்!
தன்னலமற்ற சேவைகள் பெருகி
தரணியில் ஒற்றுமை நிலவட்டும்!