சிறுவர்மணி

புத்தாண்டே வருக!

2nd Jan 2021 06:00 AM | ப . தியாகராஜன்

ADVERTISEMENT


புத்தாண்டே வருக!
புதுவளங்கள் தருக!
கொடிய நோய்கள் விரட்டிடவே
கொள்ளை நோய்கள் தடுத்திடவே 

இயற்கை வளங்கள் காத்திடவே
இன்னல் யாவும் ஒழித்திடவே
உயர்வு தாழ்வு போக்கிடவே 
உயிர்கள் யாவும் செழித்திடவே 

தீமைகள் என்றும் ஒழிந்திடவே 
நன்மைகள் நாளும் ஓங்கிடவே 
புத்தாண்டே வருக!
புதுப்பொலிவு தருக!

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT