பொருட்பால் -- அதிகாரம் 55 -- பாடல் 7
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச்செயின்.
- திருக்குறள்
நாட்டு மக்கள் யாவர்க்கும்
இறைவன் போன்று விளங்கிடும்
அரசன் நாட்டு மக்களை
அன்பால் வாழ வைப்பவன்
அறத்தின் வழியில் மக்களை
வாழவைக்கும் அரசனை
நீதிமுறை நிர்வாகமே
நிலைத்து வாழச் செய்திடும்
ADVERTISEMENT
-ஆசி.கண்ணம்பிரத்தினம்