சிறுவர்மணி

நூல் புதிது!

27th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT

 

சிறுவர் கதைப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : கிருங்கை சேதுபதி
பக்கம் - 232
விலை : ரூ . 230/-

பாடல் எழுதுவது சிறப்பான செயல். அதிலும் அந்தப் பாடலில் ஒரு கைதையைச் சொல்வது என்பது அதனினும் சிறப்பு! இந்த நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அருமையான பொக்கிஷம்! நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்... சின்னஞ்சிறு கதைப்பாடல்கள்... வேடிக்கைக் கதைப் பாடல்கள்... அறநெறிக் கதைப்பாடல்கள்... தொன்மக் கதைப்பாடல்கள்... வரலாற்றுக் கதைப் பாடல்கள்... விடுதலை வேள்வியில் நேர்ந்தவற்றைக் கதையாகச் சொல்லும் பாடல்கள்... அறிவியல் கதைப்பாடல்கள் போன்ற தலைப்புகளில் மொத்தம் 91 பாடல்கள்! மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட நூல் இது! பழைய பாடலாசிரியர் முதல் தற்போதைய பாடலாசிரியர்கள் வரை எழுதிய கதைப் பாடல்கள்! குழந்தைகள் இவற்றை ஒரு நாட்டிய நாடகமாக நடித்தால் மிகச் சிறப்பாக இருக்கும்! கருத்துச் செறிவும், அறநெறிகளையும் போதிக்கும் அருமையான தொகுப்பே இந்த நூல்! வெளியிட்டோர் : சாகித்திய அகாதெமி, குணா வளாகம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018. தொலைபேசி - 044 - 24311741.


சிட்டுக்களின் மெட்டுகள்

ADVERTISEMENT

ஆசிரியர் - குழந்தைசாமி
பக்கம் - 144
விலை - ரூ 200/-

130 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு! மிக அருமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்! "இயற்கை' தலைப்பில் உள்ள பாடலில் முதல் நான்கு வரிகளே சிறந்த உதாரணம் - ஆத்தோரம் சலசலக்கும்..... அரசமரம் காத்தடிக்கும்..... நாத்தோரம் வளர்ந்த புல்லு...... நாணலுமே தலையசைக்கும்!...... மற்றொரு உதாரணம், "இராணுவத்திற்கு மரியாதை' பாடலில், பனிமலையில் நின்றபடி...... பனிமழையில் நனைந்தபடி..... பாரதத்தைக் காக்கும் அந்த...... படைவீரரை வணங்குவோம்!' என்ற வரிகள் அருமை! வெளியிட்டோர் - ஆரோ பதிப்பகம், 61, நியூ பாத்திமா நகர், ஏழாம் தெரு, விளார் சாலை, தஞ்சாவூர் - 613006, கைபேசி - 9080801016.

Tags : நூல் புதிது!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT