சிறுவர்மணி

பொன்மொழிகள்

27th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT

 

பக்திக்கும், மதிப்புக்கும் உரிய இடம் கோயில் மட்டுமல்ல.... நாம் பணிபுரியும் இடமும்தான்.
- காந்தி

வெற்றிக்கு நம்பிக்கையே துணைவன். 
- பிலிப்

வாய்ப்புகளை தக்கபடி பயன்படுத்தத் தெரிந்தவர்களே பெருமைக்குரிய மனிதராவார். 
- கோல்டன் ஸ்மித்

ADVERTISEMENT

வறுமை நிலை இழிவல்ல..... அதை நியாயமான முறையில் கடக்க முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவு! 
- பெலிக்வீஸ்

பேச்சில் இனிமை, உதவும் மனம், கர்வமின்மை, பொறுமை இந்த நான்கும் நல்லோர் இயல்பு. 
- ஜெயேந்திரர்

உடற்பயிற்சியால் உடல் உறுதி பெறும். பொறுமையால் உள்ளம் உறுதி பெறும்.  - விவேகானந்தர்.

புகழ்ச்சியால் மகிழ வேண்டாம்.... நிந்தனையால் வருத்தமுறவும் வேண்டாம் .
 - யாரோ

பணிவு என்பது வாழ்க்கையின் உயிர்நாடி. அது வாழ்க்கையை உயரச் செய்கிறது. 
- கிருபானந்த வாரியார்.

தவறுகளைத் திருத்திக்கொண்டிருக்கும்போதே ஞானம் உதயமாகிவிடுகிறது. 
- ஆதி சங்கரர்.

மற்ற உயிர்களின் மீது அளவுகடந்த அன்பும், மதிப்பும் வைத்திருப்பதே அஹிம்சையின் அடையாளம். 
- மஹாவீரர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT