சிறுவர்மணி

நிலா!

27th Feb 2021 06:00 AM | வளர்கவி

ADVERTISEMENT

 

தங்கக் காசு போலவே
தகதகன்னு வானிலே
மஞ்சள் நிலவு தெரியுது
மனதில் இன்பம் பெருகுது!

கொஞ்சம் கொஞ்சமாகவே 
கூனல் நிலவு வளருது
எங்கும் ஒளியைச் சிந்தியே
இன்பம் தந்து ஒளிருது!

பஞ்சு மேகப் போர்வையுள் 
படுத்துக் கொஞ்சம் தூங்குது
பூவும் மொóடடும் விரிந்திட 
பொலிவு காட்டிச் சிரிக்குது!

ADVERTISEMENT

அழகு நிலவு போலவே 
அகிலம் தன்னில் நாமுமே 
சிரித்த வண்ணம் வாழுவோம்
சிறப்பு பெற்று வாழுவோம்!

Tags : நிலா!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT