சிறுவர்மணி

பேரொலிக்கு அஞ்சிய நரி!

27th Feb 2021 06:00 AM | ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

நரி ஒன்று மிகுந்த பசியுடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. ஓரிடத்தில் கூட அதற்கு உணவு கிடைக்கவில்லை! திடீரென்று காற்று பலமாக வீசியது! அப்போது ஒரு பேரொலி கேட்டது! நரி பயந்து விட்டது! பயந்து ஓரிடத்தில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தது! நரி நின்றாலும் அந்தப் பேரொலி நிற்கவில்லை! நரிக்கு பயம் அதிகரித்தது! பலத்த காற்றுக்கு இதமாக ஒரு புதரில் மறைந்து கொண்டது. ஆனால் அந்தப் பேரொலி நிற்கவில்லை! எவ்வளவு நேரம்தான் அந்த நரி அந்தப் புதரில் ஒடுங்கி இருக்க முடியும்?..... சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல அந்த ஒலி வந்த பக்கம் செல்ல ஆரம்பித்தது.

இவ்வளவு பெரும் சத்தம் எப்படி வருகிறது? அதவும் விட்டு, விட்டு வருகிறதே?.... என்னவாக இருக்கும்? என்று நரி யோசித்தது. நரி ஒரு மரத்தை நெருங்கியது. அந்த ஒலி அந்த மரத்தின் மேலிருந்துதான் வருகிறது என்பதை உணர்ந்தது. மேலே பார்த்தது.

மரத்தில் ஒரு கிளையில் ஒரு பெரிய மேளம் இறுகக் கட்டப்பட்டிருந்தது. அருகில் ஒரு சிறிய கிளை இருந்தது. காற்றின் வேகத்தில் அந்தக் கிளை மேளத்தின் தோல் பகுதியில் அடிக்கடி பட்டது! அதனால் அந்தப் பேரொலி ஏற்பட்டது! இப்போது நரி அந்தப் பெரிய சத்தம் வந்த காரணத்தை அறிந்து கொண்டது!

ADVERTISEMENT

""ச்சே!.... இவ்வளவுதானா?.... இதற்கா நான் இவ்வளவு பயந்தேன்?.... '' என நினைத்தவாறே மீண்டும் இரை தேட ஆரம்பித்தது.

நீதி : தைரியமே உற்ற துணை.

Tags : பேரொலிக்கு அஞ்சிய நரி!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT