சிறுவர்மணி

கடி

27th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT


""செருப்பு காலை கடிக்குதுடா!''
""மாலையிலே போட்டுக்கோயேன்!''

கே.இந்து குமரப்பன், 
விழுப்புரம்.

 

 

ADVERTISEMENT

""செளமியா, பூனைக்குட்டிக்கு பேர் வெச்சுட்டியா?''
""ஓ!''
""என்ன பேரு?''
""செளமியாவ்!''

வி.ரேவதி, 
தஞ்சாவூர்.

 

""எங்க அண்ணன் ஊரே சிரிக்கும்படியா ஒரு காரியம் செஞ்சுட்டான்!''
""என்ன பண்ணான்?''
""பத்திரிகையிலே அண்ணனோட ஒரு சூப்பர் ஜோக் வந்திருக்கு!''

மங்கை, 
திருநெல்வேலி - 627002.

 

 

""ஒரு ரூபா காயின் தொலைஞ்சு போனதுக்கு, இந்த இருட்டுலே ஏன் சிரமப்பட்டு தேடிக்கிட்டு இருக்கே.... காலையிலே தேடிக்கலாம் வா!''
""காலையிலேயிருந்துதான் தேடிக்கிட்டு இருக்கேன்!''

நா.வினோத் குமார், 
அரக்கோணம் - 632510.

 

""ஒரு பக்கம் எலி!.... ஒரு பக்கம் பால்!..... பூனையோட  கண்ணு எதிலே இருக்கும்?''
""எலி மீது இருக்கும்!''
""நோ!..... பூனையோட முகத்திலேயேதான் இருக்கும்!''

ஆர். சுப்பு, 
திருத்தங்கல்.

 

""வகுப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?''
""பேசாம ஆன்லைன் கிளாûஸயே 
கன்டின்யூ பண்ணலாம் சார்!''

கோ.சாய்லட்சுமி,
திருநெல்வேலி - 627011.
 

Tags : கடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT