பொருட்பால் - அதிகாரம் 65 - பாடல் 7
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
- திருக்குறள்
தேவையானதைப் பேசிட
வல்லவனாய் இருந்திடு
சொல்லும்போது சோர்வின்றி
அஞ்சிடாமல் சொல்லிடு
அந்த முறைகள் அறிந்தவன்
அனைத்தும் உணர்ந்து பேசுவான்
அவனைக் குழப்பி வென்றிட
அறிஞராலும் இயலாது.
ADVERTISEMENT
-ஆசி.கண்ணம்பிரத்தினம்