கேள்வி: கோயில் சுவர்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங் களைப் பூசுவது ஏன்?
பதில்: நம் முன்னோர்கள் உருவாக்கிய ஒவ்வொன்றிற்கும் பின்னால் காரணங்கள் பல இருக்கின்றன. இவற்றை அறிய அறிய நமக்கு மிகவும் வியப்பாக இருக்கும். தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் மேம்பட்டபிறகும் உருவாக்க அல்லது ஏற்படுத்த முடியாத பல விஷயங்களை அக்காலத்திலேயே நமது முன்னோர்கள் எந்தவித அறிவியல் உபகரணங்களும் இல்லாமலேயே உருவாக்கி அல்லது கண்டுபிடித்து, செயல்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பொதுவாக நமது கோயில்களுக்குச் செல்லும் போது கோயில் சுவற்றில் வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் மாற்றி மாற்றி பட்டை பட்டையாகக் கோடுகள் பூசபட் டிருக்கும்.
இதற்குக் காரணம் நமது உடலில் வெள்ளை மற்றும் சிகப்பு இரத்த அணுக்கள் உள்ளன. சிகப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கின்றன. வெள்ளை அணுக்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
இவை இரண்டும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை. இதைக் குறிக்கதான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோயில் சுவர்களில் பட்டைகள் பூசப்பட்டிருக்கின்றன.