சிறுவர்மணி

பொன்மொழிகள்

20th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT

 

பணிவு என்பது ஆணவத்தைப் போக்கும் மிகச் சிறந்த மருந்து 
- மாதா அமிர்தானந்தமயி

கடமையை முன்னிட்டுச் செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக்கூடாது!
- காந்தி 

அன்னதானத்தைவிட வித்யாதானம் என்னும் கல்விச் செலவுக்கு உதவுதல் மிகச் சிறந்தது 
- காஞ்சி மகா பெரியவர்.

ADVERTISEMENT

அறிவுக்கு முற்றுப் புள்ளி என்பது கிடையாது.  
- ராஜாஜி 

ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம். 
- எம் . எஸ் . உதயமூர்த்தி.

ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின் கட்டளைப்படி வாழ்கிறான். 
- திரு . வி . கலியாண சுந்தரனார்.

ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் கவுரவிக்கப்படும். 
- விவேகானந்தர்.

ஒரு நாடு, அதன் கல்விச் சாலைகளில்தான் உருவாக்கப்படுகிறது 
- டாக்டர் இராதாகிருஷ்ணன்

அன்பை வாங்கவோ, விற்கவோ முடியாது! அன்புக்கு விலை அன்பே! 
- தாமஸ் புல்லர்

பேச்சு வெள்ளிக்கு நிகரானதாக இருக்கலாம்..... ஆனால் மவுனம் தங்கத்திற்கு நிகரானது. 
- நபிகள் நாயகம்

Tags : பொன்மொழிகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT