சிறுவர்மணி

விடுகதைகள்

20th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT


1. நீருக்குள்ளும் நிலத்துக்குள்ளும் வாழ்வான், பாறைக் குள்ளும் பதுங்கி வாழ்வான்...
2. கையளவு உடம்புக்காரன், காவலுக்குக் கெட்டிக்காரன்...
3. மேகத்தின் பிள்ளை இவன். தாகத்தின் நண்பனும் கூட...
4.  முற்றத்தில் நடப்பான், மூலையில் கிடப்பான்...
5. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலில் நிற்பான்...
6. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும்...
7. இருட்டில் கண் சிமிட்டும், ஆனால் நட்சத்திரமல்ல...
8. வெளுத்த அழகி, மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள்...
9. ஆளுக்குத் துணை வருவான், ஆனால் பேச மாட்டான்...

விடைகள்


1. தவளை    
2.  பூட்டு
3. மழை  
4.  துடைப்பம்  
5.  கதவு 
6.  வேர்க்கடலை   
7.  மின்மினிப்பூச்சி
8.  வாழைப்பழம்  
9.  நிழல்

ADVERTISEMENT
ADVERTISEMENT