சிறுவர்மணி

கொய்யா... ஓ!...கொய்யா!

20th Feb 2021 06:00 AM | எஸ் . மாரியப்பன்.

ADVERTISEMENT

 

அய்யா கொய்யா விற்கிறார்
அரைக் கிலோ ரூபாய் இருபதாம்!
கையில் எடுத்தால் வாயூறும்!
கடித்துத் தின்றால் அமுதாகும்!

ஏழை எளியோர் தின்பதற்கே 
இயற்கை கொடுத்த கொடையாகும்!
உழைக்கும் மக்கள் வாங்குகிறார் 
உவப்புடன் பசியைப் போக்குகிறார்!

கூறு கட்டி விற்கின்றார்
கூடையில் எடுத்துத் தருகின்றார்!
ஏறும் வெயில் நேரத்தில் 
எடுத்துத் தின்னச் சுகமாகும்!

ADVERTISEMENT

சிவப்புக் கொய்யா கற்கண்டு 
சீனிக்கொய்யா நெய் லட்டு!
உவப்பாய் வாங்கி உண்ணுங்கள்
உள்ளம் மகிழ்ந்தே செல்லுங்கள்!

பண்ணைத் தோட்டப் பழமாகும்!
பழமும், காயும் தேனாகும்!
அன்புக் குழந்தைகள் உண்பதற்கு 
அப்பா வாங்கிச் செல்கின்றார்!

ADVERTISEMENT
ADVERTISEMENT