சிறுவர்மணி

காக்கையும் கந்தனும்!

சுமன்

ஒருநாள் மாலை மாடுகள் கூட்டமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தன. சுமார் நூறு மாடுகள் இருக்கும். அவற்றை மேய்க்கும் கந்தன் கழியுடன் மாடுகளை ஒழுங்குபடுத்தி விரட்டிக் கொண்டிருந்தான். அவனது தலையில் ஒரு சிறு கூடை இருந்தது. அதில் அவன் மதிய உணவைக் கொண்டு வந்த பாத்திரங்கள் இருந்தன. சாப்பிட்ட பின் கழுவப்பட்ட பாத்திரங்கள் அவை. மாலைச் சமையலுக்காக கொஞ்சம் காய்ந்த குச்சிகளைக் கட்டி அந்தக் கூடையில் வைத்திருந்தான் . மாட்டு மந்தை கிராமத்திற்குத் திரும்பும் வழியில் ஒரு மரத்தில் காகம் ஒன்று அமர்ந்திருந்தது. அது கூட்டைச் சரி செய்வதற்காக ஒரு குச்சியைத் தேடிக்கொண்டிருந்தது. கந்தனின் தலையில் குச்சிகளைப் பார்த்த காகம் அதிலிருந்து ஒரு குச்சியை எடுத்து வர அந்தக் கூடையின் மீது அமர்ந்தது. காகம் லேசான பறவையாதலால் கந்தனுக்கு காகம் உட்கார்ந்தது தெரியவில்லை.

காகத்திற்கு அந்தக் கூடையில் அமர்ந்ததும் ஒரு வீண் பெருமை வந்து விட்டது!

அடடா!..... இந்த மாடுகள் என்னால் அல்லவா மேய்க்கப்படுகின்றன?.... என்று நினைத்துக் கொண்டது. அது ஒரு குச்சியை கவ்விக்கொண்டது.

"ஹை!..... என் கையிலும் ஒரு சிறு கழி இருக்கிறது!.... என்னால்தானே இந்த மாடுகள் ஒழுங்காக வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றன!...... அது மட்டுமா?.....இந்த மாடுகளை மேய்ப்பவனையும் சேர்த்து அல்லவா நான் மேய்க்கிறேன்!.....'' என்று ரொம்பப் பெருமையாக நினைத்தது. குச்சியைக் கவ்விக்கொண்டு கூடையில் ஒய்யாரமாக வந்த காக்கை தான் வசிக்கும் மரம் அருகில் வந்ததைக் கண்டது.

அது கந்தனிடம் ""என் வேலை முடிந்தது!.... இனி நீ மாடுகளைப் பார்த்துக் கொள்!'' என்றது.

காக்கையின் வீண் பெருமையைப் பொருட்படுத்தாத கந்தன் நடையைக் கட்டினான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT