சிறுவர்மணி

கடி

20th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT

 

""எனக்குப் பொருத்தமான ராசிக்கல் வாங்கிக்கிட்டு திரும்பி வரும்போது.....''
""என்ன ஆச்சு?''
""ஒரு கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன்!''

சி.விஜயாம்பாள்,
கிருஷ்ணகிரி.

 

ADVERTISEMENT

""மளிகைக் கடையிலே யாரோ கொள்ளை அடிச்சுட்டாங்களாண்டா''
""கொள்ளை வேக வெப்பாங்களே தவிர அடிக்க மாட்டாங்களே...''

ஆர் . மகாதேவன்,
திருநெல்வேலி டவுன் - 627006.

 

""எங்க எல்லாருக்குமே பேக் பெயின் அங்கிள்!''
""அதெப்பிடிடா?....''
""அது வந்து "ஸ்கூல் பேக்' பெயின்!''

மல்லிகா அன்பழகன்,
சென்னை.


""பாட்டி!,..... ஒளியின் வேகத்தில் நாம போனால் சூரியனை எட்டு நிமிஷத்தில் அடைஞ்சிடலாம்!''
""அதுக்கு ஏண்டா அத்தனை சிரமம்?....காலையிலே ஜன்னலைத் திறந்தால் தானே சூரியன் உள்ள வரப்போகுது!''

ஆர் . யோகமித்ரா,
செம்பாக்கம்.

 

""..."லாக் டவுன்'.... ன்னா?''
""பூட்டு கீழே விழுந்துடுச்சின்னு அர்த்தம்!''
""..."டக் அவுட்' ....ன்னா?''
""வாத்து செத்திடுச்சுன்னு அர்த்தம்!''


கே. ஆர்.ஜெயக்கண்ணன்,
சந்தைடி அஞ்சல் - 629703.

 

""உங்கப்பா கூட பேங்க்குக்குப் போனப்போ திருடன் வந்தானா?.... நீ பார்த்தியா?''
""ஆமாம்!.... பார்த்தேன்"
""அவன் எப்படிடா இருந்தான்?''
""கோடு போட்ட பனியன் போட்டுக்கிட்டு, பரட்டைத் தலையோட, கழுத்திலே கர்சிப்பெல்லாம் கட்டிக்கிட்டு திருடன் மாதிரியே இருந்தான்!''

சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.
 

Tags : கடி
ADVERTISEMENT
ADVERTISEMENT