சிறுவர்மணி

மரக்கிளை ஊஞ்சல்...

13th Feb 2021 06:00 AM | -வெ. தமிழழகன்

ADVERTISEMENT

 

மரக்கிளையில் கயிறு கட்டி
மகிழ்ந்து ஊஞ்சல் ஆடலாம்!
மாமரத்து நிழலில் கலந்து
மனது போல பாடலாம்!

மஞ்சள் நிற மாம்பழத்தை
நீயும் நானும் தின்னலாம்!
நீலக் குயிலின் பாடல் கேட்டு
நீயும் பாட எண்ணலாம்!

நிறைக்கும் பசுமை வயலைக் கண்டு
நித்தம் நித்தம் குதிக்கலாம்!
நீண்டு வளைந்த வாய்க்கால் நீரில்
நிமிர்ந்து கவிழ்ந்து குளிக்கலாம்!

ADVERTISEMENT

உரக்கக் கத்தும் பறவை போல
உயர உயரப் பறக்கலாம்!
உவகை என்ற மனதைத் தட்டி
உள்ளக் கதவை திறக்கலாம்!

சிறக்கப் பேசி சிறக்க சிரித்து
சிறந்து பழகி ஆடலாம்!
கயிற்று ஊஞ்சல் ஆடலாம்
களிப்பு பொங்க ஆடலாம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT