சிறுவர்மணி

கூரை மீது நிலா!

13th Feb 2021 06:00 AM | - துரை ஆனந்த் குமார்

ADVERTISEMENT

 

நிலா என்று ஒரு கோழிக்குஞ்சு இருந்தது. எப்பவும் குறும்பு பண்ணிக்கிட்டே இருக்கும். யார் சொன்னாலும் கேக்காது. ஒரு நாள் அம்மாவிடம் தன் பெயருக்கான காரணத்தைக் கேட்டது. அதற்கு அந்தக் கோழி, வானத்து நிலவைக் காட்டி, ""நீயும் அது போல அழகாக இருக்கிறாய்!.... அதனால்தான் அந்த பெயரை உனக்கு வைத்தேன்!'' என்றது. அன்று முதல் கூரை மேல் ஏறி நிலவைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் நிலாக்குட்டிக்கு உண்டானது.

""அம்மா!....நான் அந்தக் கூரைக்கு மேலே போய் நிலாவைப் பாக்கப் போறேன்'' என்றது.

அதைக் கேட்ட தாய்க்கோழி, ""அப்படியெல்லாம் போகவே கூடாது.... ' ன்னு திட்டியது. அதற்குப் பிறகு கொஞ்ச நாள் நிலா சும்மா இருந்தது.

ADVERTISEMENT

ஒரு நாள் அதிகாலை, எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். நிலா மட்டும் குடுகுடுவென்று இங்கும் அங்கும் ஓடியது. கூரை மீது ஏற என்ன வழி என்று தேடியது. அங்கிருந்த ஏணியைப் பார்த்தது. அடுத்த நிமிடம், நிலா, கூரை மீது தனியாக நின்று கொண்டு இருந்தது. ""ஏ, நிலா!.... நீ ரொம்ப அழகு!'' என்று வானத்தை நோக்கி, சத்தமாகக் கூவியது.

அப்போது வானத்தில் ஏதோ சிறகடிக்கும் சத்தம் கேட்டது. மேலே பார்த்த நிலாவின் உடல் அச்சத்தில் நடுங்கியது. ""அம்மா...

அம்மா!....காப்பாற்று!.... இங்கே ஒரு பருந்து!'' என்று அலறியது. வேகமாகக் கீழே இறங்கிய பருந்து நிலாவிடம் வந்தது. அப்போது கீழேயிருந்து கூரைக்குத் தாய்க்கோழி பறந்து வந்தது. கோழியின் தாக்குதலை எதிர்பார்க்காத பருந்து விருட்டென்று அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது.

தாய்க்கோழியின் முதுகில் ஏறிக்கொண்ட நிலா, பாதுகாப்பாகக் கீழே இறங்கி விட்டது. கூரை மீது ஏறக்கூடாது என்று தாய் சொன்ன தற்கான காரணமும் அதற்குப் புரிந்தது. அதற்குப் பிறகு நிலா, கூரை மீது ஏறாமல் கீழேயே தன் குறும்புகளைத் தொடர்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT