பொருட்பால் - அதிகாரம் 63 - பாடல் 7
இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
- திருக்குறள்
இன்பமும் துன்பமும் உடலிலே
சேரும் தன்மை கொண்டவை
உடம்பைத் தேடித் துன்பங்கள்
ஓடி வந்து ஒட்டலாம்
என்ற உண்மை உணர்ந்தவர்
கலக்கம் கொள்ள மாட்டாரே
வந்திடும் துன்பத்தைத் தாங்கிடும்
வலிமை கொண்டு வாழ்வாரே
ADVERTISEMENT
-ஆசி.கண்ணம்பிரத்தினம்