எங்க வீட்டு தோட்டத்துல
எத்தனையோ மரமிருக்கு
அத்தனை அத்தனை மரங்களிலும்
அழகழகாய் பழமிருக்கு
கொத்திக் கொத்தி தின்றிடவே
கிளைகளில் கிளிகள் அமர்ந்திருக்கு
கொறித்துக் கொறித்து சாப்பிடவே
அணிலும்கூட வந்திருக்கு
விருப்பம்போல சாப்பிடட்டும்
விரட்டி ஓட்ட வேண்டாமே
பசியாறி அவை போனதுன்னா
வாயார நம்மை வாழ்த்திடுமே!
ADVERTISEMENT