சிறுவர்மணி

கடி

13th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT

 

""எங்க அண்ணன் அடிக்கடி சட்டத்தைக் கையிலே எடுத்துக்குவார்!''
""நீங்க யாரும் கேட்க மாட்டீங்களா?''
""அதில்லே, அவரு கார்பெண்டர்!''

ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

 

ADVERTISEMENT

""உங்கிட்டே ரெண்டு ஆப்பிள் தரேன்.... கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் ரெண்டு ஆப்பிள் தரேன்.... இப்போது உங்கிட்டே எவ்வளவு ஆப்பிள் இருக்கும்?''
""ஐந்து ஆப்பிள் சார்!''
""உனக்கு கணக்கே தெரியலையே... ஐந்து ஆப்பிள்கள்னு எப்படி சொல்றே?
""இன்னிக்கு லஞ்ச் பாக்ஸ்லே அம்மா ஒரு ஆப்பிள் ஏற்கெனவே வெச்சிருக்காங்க சார்!''

உமர்ஃபாருக், கடையநல்லூர்.

 

""சப்பாத்தி சாப்பிட்டா ஷுகர் குறையுமா?''
""சப்பாத்தி சாப்பிட்டா ஷுகர் குறையாது!.... சப்பாத்திதான் குறையும்!''

டி.மோகன்தாஸ், நாகர்கோயில்.


""சோப்பு டப்பாவை எடுத்துக்கிட்டு எங்கே போறே?''
""தேய்ச்சுக் குளிக்கப் போறேன்!''
""வேணாம்டா!..... சோப்பு டப்பாவைத் தேய்ச்சுக் குளிச்சா உடம்பு புண்ணாப் போயிடும்டா''

ஆர் . சுப்பு, திருத்தங்கல் - 626130.

 

""முழுப் பூசணிக்காயை சோத்துலே மறைக்க முடியுமா?''
""முடியுமே!.... ஒரு அண்டா சோறு வேணும்!... அவ்வளவுதான்!''

செ.ஆசைத்தம்பி, சேலம் - 636502.


"" ஆறும், ஆறும் சேர்ந்தா என்ன வரும்?''
""வெள்ளம் வரும்!''

எம்.சங்கீதா, பட்டுக்கோட்டை.

ADVERTISEMENT
ADVERTISEMENT