சிறுவர்மணி

நெசவு!

10th Apr 2021 06:00 AM | சி. விநாயக மூர்த்தி

ADVERTISEMENT

 

பாயை விரித்த காட்சி போல் 
பாவும் விரியும் தறியிலே!
பாயும் கணையைப் போலவே 
நாடா நுழையும் நடுவிலே!

இழைகள் கோர்த்த விழுதுகள்
ஏறி இறங்கும் வேளையில்
வழி கிடைக்கும் நுழைந்திட 
நூலைப் பின்னும் நெசவிலே!

காடிப் பசையின் முறுக்குடன் 
காடாத் துணியும் நெய்கிறார்!
போடுகின்ற சாயத்தில்
புது வண்ணத்தில் நெய்கிறார்!

ADVERTISEMENT

வெண்பருத்திப் பஞ்சு நூல்
பாவாய் மாற்றும் ராட்டினம்!
கண் பறித்து அழகுடன் 
துணியாய் மாறும் நெசவிலே!

வேட்டி சேலை துண்டுகள்!
விதவிதமாய்ப் போர்வைகள்!
ஓட்டும் தறியில் நெய்கிறார்!
உழைப்பைப் போற்றி வணங்குவோம்!

சேலையோரம் புதுவகைக் 
கோலம் நெசவில் வரைகிறார்!
வேலையல்ல, நெசவென்றால் 
விழியைக் கவரும் கலையன்றோ!

Tags : நெசவு!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT