சிறுவர்மணி

நூல் புதிது!

DIN


திருக்குறள் கதைகள் - 1

(வண்ணப்படக் கதை)
ஆசிரியர் - எ.சோதி
பக்கம் - 40
விலை - ரூ 70/-

ஆசிரியரின் 303 - ஆவது நூல் இது. ஆசிரியருக்கு அறிமுகமே தேவையில்லை! குழந்தை இலக்கியத்தில் நிறைந்த அனுபவம் உள்ளவர். கற்க கசடற... நன்றி மறப்பது நன்றன்று... ஊழையும் உப்பக்கம் காண்பர்... தன்னைத்தான் காக்கின்... ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்... போன்ற தலைப்புகளில் கதைகள் அழகிய வண்ணப்படங்களோடு சிறப்பாக உள்ளன.

திருக்குறள் கதைகள் - 2

ஆசிரியர் - எ.சோதி
பக்கம் - 40
விலை - ரூ 70/-

இன்னா செய்தார்க்கும்... எனைத்தானும் நல்லவை கேட்க... அற்றால் அளவறிந்து உண்க... தன்நெஞ்சு அறிவது பொய்யற்க... உருவு கண்டு எள்ளாமை... யாமெய்யாக கண்டவற்றுள்... ஆகிய தலைப்புகளில் குறள் நெறி பரப்பும் அற்புதக் கதைகள். ஆசிரியர் குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் நல்ல அனுபவம் உள்ளவர். கதைகள் படக்கதைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் ரசித்துப் படிக்கும் வகையில் உள்ள புத்தகம் இது!

இராயர் - அப்பாஜி


(வண்ணப் படக் கதை)
ஆசிரியர் - எ.சோதி
பக்கம் - 40
விலை - ரூ 60/-

கிருஷ்ணதேவ ராயரின் மந்திரி அப்பாஜியின் அறிவுக்கூர்மையை வியந்து போற்றாதார் யார்?... குழந்தைகளுக்கு அந்தக் கதைகளை மிக அருமையான வடிவமைப்புடன் கூறியிருக்கிறார் ஆசிரியர் எ.சோதி. அனைவரும் படித்துப் பயன் பெறவேண்டிய அருமையான ஐந்து கதைகளின் தொகுப்பே இந்த நூல்.

மேற்கண்ட மூன்று நூல்களையும் வெளியிட்டோர் - நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605003. செல்லிடப்பேசி - 9345450749.

முதல் மாணவன் (குறள் நெறிக் கதைகள்)

ஆசிரியர் - பாவலர் மலரடியான்
பக்கம் - 96
விலை - ரூ 60/-

குழந்தைகள் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் உள்ள படைப்பாளர் மலரடியான். பல ஆண்டுகளாக எழுத்துப் பணியில் ஈடுபட்டவர். பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர்.

இந்நூலில் ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பும் உள்ளது. படித்தபோது வியப்பாக இருக்கிறது. ஆசிரியராக இருந்த அனுபவம் குழந்தைகளின் மனங்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. பதினேழு கதைகளின் தொகுப்பு இந்த நூல். அனைத்தும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.

என் மனப் பேழை

(விழிப்புணர்வுக் கதைகள்)
ஆசிரியர் பாவலர் மலரடியான்
பக்கம் - 96
விலை - ரூ 60/-

பூமிக்கு வந்த தேவதை.. இளவரசி.. ஆடும் முனிவரும்.. நூற்றுக்கு நூறு.. முதலிய 26 கதைகளின் தொகுப்பே இந்த நூல். அத்தனையும் முத்துக்கள். ஆர்வத்தை தூண்டுபவை. படித்து ரசிக்கத் தக்கவை. மேற்கண்ட இரு நூல்களையும் வெளியிட்டோர் - சஞ்சீவியார் பதிப்பகம், டி-1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், பழைய எண் 11, கவரை தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை - 600015. செல்லிடப்பேசி - 9444270017.


பொம்மைகளின் நகரம்

ஆசிரியர் - உதயசங்கர்
பக்கம் - 60
விலை - ரூ 50/-

தமிழ் என்ற சிறுவன் தன் நண்பர்களுடன் அவனுடைய அப்பாவைத் தேடிச் செல்லும் சாகசம் நிறைந்த குழந்தைகளுக்கான சிறு நாவல் இந்தப் புத்தகம். கற்பனை கலந்த சாகசம் நிறைந்த இந்தப் பயணத்தில் "தமிழ்' எதிர்கொள்ளும் இடர்களும், அனுபவமும் வாசிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது. சிறிய குறுநாவல் அமைப்பு கொண்ட இந்தப் புத்தகம் சிறார்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை! வெளியிட்டோர் - அறிவியல் வெளியீடு, 245, அவ்வை சண்முகம் சாலை, சென்னை - 600086.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT