சிறுவர்மணி

அதிக ஆசை!

10th Apr 2021 06:00 AM | அசோக் ராஜா

ADVERTISEMENT

 

உணவகம் ஒன்றில் இருந்த பலகையில், ""இங்கு நீங்கள் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்!.... அதற்கான தொகையை உங்கள் கொள்ளுப் பேரனிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்!'' என்று எழுதியிருந்தது. 

அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அவரவர்கள் சாப்பிட்டுவிட்டு, புன்னகையுடன்  பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். ராமு அந்த உணவகத்திற்குள் நுழைந்தான். பலகையில் எழுதியிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு சந்தோஷமாகிவிட்டது. கொள்ளுப் பேரனிடம்தானே வாங்கிக் கொள்ளப் போகிறார்கள்.... என்று எண்ணி வேண்டும் வரை வயிறு முட்ட சாப்பிட்டான். 

சேவகரோ அவனிடம் தொகை எழுதிய சீட்டை நீட்டினார். 

ADVERTISEMENT

ராமு அவரை விநோதமாகப் பார்த்தவாறு, ""என்ன இது?.... அங்கே அறிவிப்புப் பலகையில், சாப்பிட்டதற்கான தொகையை கொள்ளுப் பேரனிடம் வாங்கிக் கொள்வதாக  எழுதிவிட்டு இப்போ பணம் கேக்கறீங்களே? '' என்றான்.

சேவகர் பொறுமையாக, ""இது நீங்கள் சாப்பிட்டதற்கு அல்ல!....உங்கள் கொள்ளுத் தாத்தா சாப்பிட்டதற்கான தொகை!''

ராமு வேறுவழியில்லாமல், வாயடைத்தவாறு பணத்தைச் செலுத்திவிட்டுச் சென்றான்.

Tags : அதிக ஆசை!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT