சிறுவர்மணி

வேடனும் கிளியும்!

10th Apr 2021 06:00 AM | அ.யாழினி பர்வதம்

ADVERTISEMENT

 

வேட்டைக்காரன் வனவேந்தனின் மகள் கிளி வளர்க்க ஆசைப்பட்டாள். கிளியைத் தேடிக் காட்டிற்குள் சென்றான். அங்கு ஒரு ஜோடிக் கிளிகளைக் கண்டான். அதில் அகப்பட்ட பெண் கிளியைப் பிடித்துக் கூண்டில் அடைத்துக் கொண்டு வந்தான் வனவேந்தன். மகளும் மனமகிழ்ச்சியுடன் அதை வாங்கிக்கொண்டாள். கிளி இருந்த கூண்டை ஒரு மரத்தில் தொங்கவிட்டாள்.
கிளிக்கோ அது சற்றும் பிடிக்கவில்லை. காட்டில் ஜோடியாக, சுதந்திரமாகப் பறந்த தன்னை இப்படி கூண்டில் அடைத்து விட்டார்களே என்று வருத்தமும், கோபமுமாக இருந்தது. மேலும் தன் கணவன் கிளிக்கு என்ன ஆயிற்றோ என்று வருத்தமுற்றது. அங்கிருந்து தப்பிக்க எண்ணியது.
ஒரு நாள் கூண்டிற்கு அருகே ஒரு கிளி மரத்தில் வந்து அமர்ந்தது. புதிதாக வந்த கிளியைப் பார்த்தது. கூண்டில் இருந்த கிளி. இரண்டும் ஏதோதோ பேசிக்கொண்டன.
வேட்டைக்காரன் புதிதாக வந்த கிளியைப் பார்த்துவிட்டான். அதைப் பிடிக்க எண்ணினான். அதைத் துரத்திக்கொண்டு ஓடினான். அங்கிருந்த மரங்களில் மாறி மாறி அமர்ந்தது அந்த ஆண் கிளி!
""அதைப் பிடிக்காதீங்க!.... அதுதான் என் கணவன்!.... விட்டுடுங்க!'' என்று கத்தியது பெண் கிளி. ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்த அந்தக் கிளி மயங்கிக் கீழே விழுந்து இறந்தது போல நடித்தது.
வனவேந்தனோ அதை அருகிலிருந்த குப்பையில் போட்டுவிட்டான்.
""என்ன?.... ரொம்ப வருத்தமாயிருக்கா?... நான் உங்க ரெண்டுபேரையும் ஒரே கூண்டில் வளர்க்கலாம்னு நெனைச்சேன்!.... ஆனா அது செத்துப் போச்சு!.... நான் அதைக் கொல்லலே!.... தப்பா நெனைக்கதே!'' என்று பெண்கிளியிடம் கூறினான் வனவேந்தன்.
""அய்யோ!... செத்துப் போச்சா!'' என்று மயங்கியவாறு கூண்டில் விழுந்து விட்டது பெண்கிளி!
""அடப் பாவமே!..... இந்தக் கிளியும் செத்துப் போச்சா!'' என்று கூண்டிலிருந்த பெண்கிளியை விரல்களால் சுண்டிப் பார்த்தான் வனவேந்தன்.
ம்ஹூம்.... கிளி அசையவில்லை. கிளியை அப்படியே எடுத்துக் கொண்டுபோய் ஆண்கிளியைப் போட்ட குப்பையிலேயே போட்டான் வனவேந்தன்.
போட்டதுதான் தாமதம் இரண்டு கிளிகளும் சட்டெனப் பறந்தன! தான் தப்பிக்க ஒரு வழியைக் காண்பித்த ஆண்கிளிக்கு நன்றி சொன்னவாறே அதனுடன் சந்தோஷமாகப் பறந்தது பெண்கிளி!

Tags : வேடனும் கிளியும்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT